ஆன்மிகம்
சனி பகவான்

அஷ்டமச்சனியும்... ஏற்படுத்தும் பாதிப்புகளும்..

Published On 2021-10-20 06:09 GMT   |   Update On 2021-10-20 06:09 GMT
ஏழரைச் சனியினால் ஏற்படும் பாதிப்பை விட அஷ்டமச் சனியினால் ஏற்படும் பாதிப்பு அதிகம். அஷ்டமச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோட்சார சனி சஞ்சாரம் செய்வது அஷ்டமத்துச் சனியாகும். அஷ்டமச் சனி காலத்தில் “நட்டதெல்லாம் பாழ், விழலுக்கு இரைத்த நீர், அந்நிய தேசத்திற்கு ஓடிப் போ என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது இதன் பொருள் இந்த காலகட்டத்தில் புத்தி வேலை செய்யாது. மனரீதியாக மிகக் கடுமையான அழுத்தம் ஏற்படும். சிலருக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டதை போன்ற எதிர்மறையான உணர்வு இருக்கும். இதனால் நல்லவன் கெட்டவனாகவும் அறிவு தலைகீழாகவும் மாறும்.

சிலருக்கு வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறும். உணர்ச்சி மட்டும் வேலை செய்யும். சொந்த ஊரில் இருந்தால் வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவார்கள். காரணமே இல்லாமல் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பார்கள். பிரச்சினை முடிந்த பிறகு அவர் மீது தவறில்லை என்று தெரியவரும். இதனால் தான்“அகப்பட்டவனுக்கு அஷ்டமத்து சனி” என்ற பழமொழி உள்ளது.

இரண்டரை வருடம் அஷ்டமத்து சனி வந்து போனவர்கள், நிதானமாக, யதார்த்தமாகப் பேசுவார்கள். ஞானி போல பேசுவார்கள். அந்த அளவிற்கு சனி அவர்களை கசக்கி பிழிந்து காய வைத்துவிட்டு போய் விடும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி
Tags:    

Similar News