ஆன்மிகம்

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகார பூஜை

Published On 2018-07-27 14:51 IST   |   Update On 2018-07-27 14:51:00 IST
நரம்புத் தளர்ச்சி உடையவர்களும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் அவசியம் தரிசித்துப் போக வேண்டிய தலம் திருவெண்காடு. இந்த கோவிலில் பரிகாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
புதன் பகவான் உங்கள் ஜாதகத்தில் மீனத்தில் நீசம் பெற்று இருந்தாலும், செவ்வாய், சந்திரனுடன் சேர்ந்து இருந்தாலும், 6, 8, 12-ல் அமையப் பெற்றிருந்தாலும், கோசாரப்படி உங்கள் ராசியில் சஞ்சாரிக்கும்போதும், (ஒரு மாத காலம்) மிதுனம், கன்னிராசி, லக்னத்தில் பிறந்திருந்தாலும், புதன்கிழமை பிறந்தவராக இருந்தாலும், புதன் திசை, புதன் புத்தி நடந்து கொண்டு இருந்தாலும்,

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தாலும், தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் ஐந்து வந்தாலும், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும், திருவெண்காடு வந்து, புதன்கிழமை, புதன் ஓரையில் புதன் பகவானை வழிபட்டுப் பரிகார பூஜை செய்தால் கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் எல்லாம் உண்டாகும்.

நரம்புத் தளர்ச்சி உடையவர்களும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் அவசியம் தரிசித்துப் போக வேண்டிய தலம் இது. மனநோய், சோகை, புற்றுநோய், வாதநோய், நரம்புத் தளர்ச்சி, வெண்குட்டம், ஆண்மைக்குறைவு, சீதள நோய் ஆகிய நோய்களுக்கு புதனே காரணமாக இருப்பதால் மேற்கண்ட நோயால் பாதிக்கப்பட்டவர் அவசியம் திருவெண்காடு வந்து, புதன் பகவானுக்கு பரிகார பூஜை செய்து ஆக வேண்டும்.
Tags:    

Similar News