ஆன்மிகம்

ராகு தோஷம் போக்கும் நாகநாத சுவாமி

Published On 2017-12-12 07:20 GMT   |   Update On 2017-12-12 07:20 GMT
ராகு தோஷம் உள்ளவர்கள் மணப்பாறை நாகநாத சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க, தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
மணப்பாறையில் உள்ளது, நாகநாத சுவாமி ஆலயம். இத்தல இறைவனின் பெயர் நாகநாத சுவாமி. இறைவியின் பெயர் மாதுளாம்பிகை.

இந்த ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில் கன்னிமூலை கணபதி தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். அரசமர நிழலில் இளைப்பாறும் இந்த கணபதியை வேண்டி, மரத்தடியில் முட்டையையும் பாலையும் வைத்து விட்டுச் செல்கின்றனர் பெண்கள். மரத்தின் பொந்தில் குடி கொண்டிருக்கும் நாகநாதர், அந்த பாலைப்பருகி முட்டையை உறிஞ்சி செல்வது வழக்கமாம். இதனால் அந்தப் பெண்களை பற்றியிருக்கும் நாகதோஷம் விலகும் என்பது அவர்களது நம்பிக்கை.

ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து திங்கட்கிழமைகளில் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க, அவர்களின் தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
Tags:    

Similar News