ஆன்மிகம்
தூத்துக்குடியில் இன்று பனிமயமாதா ஆலய திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடக்கிறது
பனிமயமாதா கோவிலில் சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்பட மாட்டாது. கோவிலின் உள்ளாக நடத்தப்படும் ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலய 439-வது பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பக்தர்களின்றி கொடியேற்று விழா எளிமையாக நடைபெற்றது.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பனிமயமாதா பேராலய வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பேராலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வராமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய திருவிழா நிறைவு நாள் விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பனிமய மாதா கோவிலில் சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்பட மாட்டாது. கோவிலின் உள்ளாக நடத்தப்படும் ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.
மேற்படி நாளில் பனிமய மாதா திருக்கோவிலில் நடைபெறும் அனைத்துவித ஆராதனை நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை இருக்கின்ற காரணத்தால், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியுப் சேனல்கள் மூலமும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய மாதா கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆகவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளலாம். இந்த விடுமுறைக்கு பதிலாக 07.08.2021 அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.