ஆன்மிகம்
தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி

தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி

Published On 2021-10-01 09:29 IST   |   Update On 2021-10-01 09:29:00 IST
தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதா் ஆலய பெருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி மட்டும் முக்கிய வீதிகளில் நடந்தது.
தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதா் ஆலய பெருவிழா, கடந்த 20-ந் தேதி சிறுமலர் குருமடம் சகாயஜோசப் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆராதனை, நற்கருணை ஆசீர் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா அன்று தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.

10-ம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா் செல்வம் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு பாடற்திருப்பலி நடந்தது. விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலயத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சப்பர பவனி மட்டும் முக்கிய வீதிகளில் நடந்தது. நிகழ்ச்சியில் பாதிரியார்கள் மரியஅரசு, தோமாஸ், ஞானப்பிரகாசம், சூசைராஜா, பனிமயம், சர்ச்சில், மார்ட்டின், தினேஷ் மற்றும் திரளான பங்கு மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட், உதவி பங்கு தந்தை மாா்ட்டின் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

Similar News