ஆன்மிகம்
புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2021-09-28 04:13 GMT   |   Update On 2021-09-28 04:13 GMT
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழா நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் பிள்ளை திருத்தல புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை செட்டிச்சார் விளை புனித குழந்தைஏசு தெரசாள் ஆலய பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். திருத்தல அதிபர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் தாமஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

3-ம் நாள் திருவிழா திருப்பலி நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல் ராஜ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார். தொடர்ந்து தேர் பவனி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும், வட்டார முதல்வருமான மரிய ராஜேந்திரன், அருட்பணியாளர் மரியதாசன், பங்கு பேரவை உதவித் தலைவர் புரோடி மில்லர், செயலாளர் ஜெகதா, பொருளாளர் ஜான் பென்னட், துணைச் செயலாளர் கண்ணதாசன், வின்சன்ட் ராஜா மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர். திருவிழா 3 தினங்களிலும் அரசு வழிகாட்டுதல் முறைப்படி, சமூக இடைவெளியுடன், மறைமாவட்ட விதிமுறைப்படி நடைபெறுமென பங்கு திருத்தல அதிபரும், பங்கு பேரவை நிர்வாகிகளும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News