ஆன்மிகம்
அன்னை வேளாங்கண்ணி மாதா தங்கத்தேர் கெபித் திருவிழா

அன்னை வேளாங்கண்ணி மாதா தங்கத்தேர் கெபித் திருவிழா

Published On 2021-09-11 05:37 GMT   |   Update On 2021-09-11 05:37 GMT
திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் ஜெபமாலை, சிறப்புத்திருப்பலிகள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது.
தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் அனைத்து மக்களும் வழிபடும் வகையில் அன்னை வேளாங்கண்ணி மாதாவின் தங்கத்தேர் கெபி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தங்கத்தேர் கெபியின் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் பங்கு மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்தவாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் ஜெபமாலை, சிறப்புத்திருப்பலிகள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அன்னை வேளாங்கண்ணி மாதாவின் தேர்ப்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாதாவின் தேர்ப்பவனியானது பங்குமக்கள், பக்தர்கள் யாரும் இன்றி மிகவும் எளிமையாக நடந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தூய அன்னை வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், தூய பூண்டிமாதா அன்பிய மக்கள், தங்கத்தேர் கெபித்திருவிழா கமிட்டியினர், பங்குமக்கள், எஸ்.எஸ்.மாணிக்கபுரம் பொதுமக்கள் மற்றும் இளைஞர் குழுவினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News