ஆன்மிகம்
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை

Published On 2021-09-07 09:52 IST   |   Update On 2021-09-07 09:52:00 IST
இந்த திருவிழா நாட்களில் பொது மக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழாவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. 8-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளதால் கீழ்கண்ட சில முக்கிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க கோரப்படுகிறது.

இன்று (7-ந்தேதி) தேரோட்டம் நடைபெறுவதன் காரணமாக இந்த ஆண்டு பொது மக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. தேரோட்டம் நிகழ்ச்சிக்கு பொது மக்கள் வருவதை தவிர்க்க கோரப்படுகிறது. பொது மக்களும், பக்தர்களும் தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் நேரடி சமூக வலைதளங்கள் மூலம் காண அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம் எனவும் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கோரப்படுகிறது.

பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட 8-ந் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த திருவிழா நாட்களில் பொது மக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News