ஆன்மிகம்
திருச்சிலுவை

மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2021-09-03 04:37 GMT   |   Update On 2021-09-03 04:37 GMT
மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் 442-வது ஆண்டு மகிமை திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வெளியூர் பக்தர்கள் விழாவில் பங்கேற்க அனுமதியில்லை.
மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் 442-வது ஆண்டு மகிமை திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் முதல் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, திருச்சிலுவை ஆசீர் வழங்கப்படும். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருச்சிலுவை திருத்தலத்திலும், பங்கு ஆலயத்திலும் திருப்பலிகள் நடைபெறும்.

விழாவில்முக்கிய நாளான 13-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் பின்பு ஐந்து திருக்காய சபையின் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாலை 6.30 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனையும். 14-ந்தேதி திருச்சிலுவைமகிமை பெருவிழாவை யொட்டி அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்திலும், திருச்சிலுவை திருத்தலத்திலும் திருப்பலிகள் நடைபெறும்.

காலை 6 மணிக்கு திவ்விய ஐந்து திருக்காய திருச்சபையினர் பவனி வந்து மகிமை பெருவிழா ஆராதனைகள் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசிர் மாலை 5.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் கொடியிறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வெளியூர் பக்தர்கள் விழாவில் பங்கேற்க அனுமதியில்லை.
Tags:    

Similar News