ஆன்மிகம்
கோகூர் கோடி அற்புதர் புனித அந்தோணியார் கோவில்

கோகூர் கோடி அற்புதர் புனித அந்தோணியார் கோவில்

Published On 2021-08-25 11:31 IST   |   Update On 2021-08-25 11:31:00 IST
கோகூர் அந்தோணியாரின் திருவிழாவிற்கு நம்பிக்கையோடு வாருங்கள். உங்கள் வேண்டுதல்களை கோகூர் அந்தோணியார் நிச்சயம் நிறைவேற்றி தருவார்.
நாகப்பட்டினம் மறை வட்டத்திற்கு இரண்டு பெருமைகள் உண்டு, ஒன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலம், மற்றொன்று கோகூர் புனித அந்தோணியார் திருத்தலம். ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும், ஜூன் மாதம் நடைபெறும் கோகூரில் கோவில் கொண்டுள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் பெருவிழாவிலும் ஆயிரகணக்கான மக்கள் கூடுவதையும், ஜெபிப்பதையும் பார்ப்போர் பரவசம் அடைகின்றனர். கண்டோர் சாட்சி கூறுகின்றனர். நாகையிலிருந்து மேற்கே திருவாரூர் நெடுஞ்சாலையில் கீழ்வேளூரிலிருந்து வடக்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கோகூர் புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இந்த கிராமத்தில் தான் புனித அந்தோணியார் குடிகொண்டு அற்புதங்கள், அதிசயங்கள் செய்து வருகிறார்.

கோகூர் பெயர்காரணம் :

கோகூரின் பழைய பெயர் "பனந்தோப்பு". கோவூர் கிழார் என்னும் பெரியவர் இங்கு தங்கி இருந்ததால் காலப்போக்கில் அது மருவி அவர் பெயரிலே கோகூர் என பெயர்பெற்றது. இவருக்கு பிறகு "வெள்ளை புடவை கார அம்மா " என்னும் ஒருவர் இங்கு தங்கி அறப்பணிகள் செய்து வந்தார், ஆனால் காலப்போக்கில் இங்கிருந்து மறைந்துவிட்டார் என்பது செவிவழி செய்தி.

கோகூரில் கோவில் வந்தது எப்படி:

கி.பி 1837 ஆண்டு வளம் கொழிக்கும் வற்றா நதியான வெட்டாற்றில் முதியவர் ஒருவர் தூண்டில் போட்டுகொண்டு இருந்தார், அவ்வேளையில் புனித அந்தோணியார் சொருபம் ஒன்று நீரில் மிதந்து துண்டிலை சுற்றி சுற்றி வந்தது, அந்த முதியவர் அதை ஒதுக்கிவிட்டு தூண்டில் போட்டார், ஆனால் மீண்டும் மீண்டும் அந்த அந்தோணியார் சொருபம் தூண்டிலை சுற்றி வர வியப்படைந்த அவர் சொரூபத்தை தன் வீட்டுக்கு கொண்டுவந்தார், அன்று இரவு அவர் தூங்கும் போது, கனவில் அவர் பெயரை சொல்லி கோகூரில் தனக்கு ஒரு கோவில் கட்டவும், நான் அந்தோணியார் என்றும் கூறியது. கண் விழித்த அவர் காலையில் ஊர் மக்களிடம் நடந்ததை சொல்லி, எல்லோரின் உதவியுடன் முதன்முதலில் கீற்று கோவில் கட்டி புனித அந்தோணியார் சொருபத்தை அதில் வைத்து வழிபட்டு வந்தனர், அந்த புதுமை வழங்கும் புனித அந்தோணியார் சொருபம் இன்று ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Similar News