ஆன்மிகம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் வாசலில் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்ட காட்சி.

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்ட பக்தர்கள்

Published On 2021-08-09 04:26 GMT   |   Update On 2021-08-09 04:26 GMT
வேளாங்கண்ணியில் தடையை மீறி கடலில் பக்தர்கள் குளித்து வருகிறார்கள். இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் கட்டிடத்தின் அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 3-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மூடப்பட்டு உள்ளது. இதனால் வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் பேராலய வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தனர். இதனால் பேராலயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

வேளாங்கண்ணி கடற்கரையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரைக்கு செல்லும் வழியில் போலீசார் தடுப்புவேலி வைத்து அடைத்து கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். ஆனால் இந்த தடையை மீறி வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக குளித்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் இதை கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News