ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் தவக்கால 6-ம் வெள்ளி சிறப்பு திருப்பலி

பூண்டி மாதா பேராலயத்தில் தவக்கால 6-ம் வெள்ளி சிறப்பு திருப்பலி

Published On 2021-03-27 08:33 IST   |   Update On 2021-03-27 08:33:00 IST
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் தவக்காலத்தின் 6-வது வெள்ளியான சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் தவக்காலத்தின் 6-வது வெள்ளியான நேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக ஜெபமாலை பாடல்களை பாடினர். தொடர்ந்து கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தை அருண் சவரிராஜ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

திருப்பலிக்கு பின்னர் ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏசுநாதரை சிிலுவையில் அறைய தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்தது வரையான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டது.

Similar News