ஆன்மிகம்

வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆடம்பர தேர்பவனி

Published On 2019-05-06 03:28 GMT   |   Update On 2019-05-06 03:28 GMT
புதுவை வில்லியனூரில் பிரசித்திபெற்ற லூர்து மாதா ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
புதுவை வில்லியனூரில் பிரசித்திபெற்ற தூய லூர்து மாதா ஆலயம் உள்ளது. பிரான்சு நாட்டின் லூர்து நகருக்குப்பின் உலகிலேயே லூர்து மாதாவிற்கு என்று கட்டப்பட்ட 2-வது ஆலயம் இந்த ஆலயமாகும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, தேர்பவனி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் 9 நாட்களும் நடைபெற்றது. விழாவில் நேற்று காலை 7-30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஆடம்பர திருவிழா தேர்பவனி நடந்தது.

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அயூப் மற்றும் பங்குத்தந்தையர்கள், பங்கு மக்கள், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் லூர்து மாதா ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து அடிகளார் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News