ஆன்மிகம்
மதுரை புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழாவையொட்டி கொடி ஏற்றியதையும், திரளானவர்கள் கலந்துகொண்டதையும் காணலாம்.

லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2019-02-02 04:55 GMT   |   Update On 2019-02-02 04:55 GMT
மதுரை புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். 9-ந்தேதி அன்னையின் தேர்பவனி நடைபெறுகிறது.
மதுரை புதூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில் 99-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து ‘மரியாள் காட்டிய புனிதம்‘ என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தினார். தினமும் காலையிலும் மாலையிலும் நவநாள் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

முக்கிய நிகழ்ச்சியாக 8-ந்தேதி நற்கருணை பவனியும், 9-ந்தேதி தக்கலை மறை மாவட்ட ஆயர் ராஜேந்திரன் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்று, அன்னையின் தேர்பவனி நடைபெறும். 10-ந்தேதி மாதாவிற்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாஸ்கென்னடி, உதவி பங்கு தந்தையர்கள் மார்சல் லிங்கன், பிரவின், சூசைஅடிமை, அமலஆஸ்வின் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News