ஆன்மிகம்
மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.

மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை திருவிழா தொடங்கியது

Published On 2018-09-05 08:45 IST   |   Update On 2018-09-05 08:45:00 IST
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தின் திருவிழ கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் மணப்பாடு திருச்சிலுவை ஆலயமும் ஒன்றாகும். கடற்கரையில் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் மீதுள்ள ஆலயத்தில் ஆண்டுதோறும் மகிமை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆலயத்தில் 439-வது ஆண்டு மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி நடந்தது. பின்னர் காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து வீரபாண்டியன்பட்டினம் பங்குத்தந்தை ஆன்ட்ரூ டிரோஸ் ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார். பின்னர் மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. திரளானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் அதிகாலை 5.15 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, தொடர்ந்து பங்கு ஆலயத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

10-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட குரு உபால்டு மறையுரையாற்றுகிறார்.

11-ம் திருநாளான 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலி, 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடக்கிறது. பின்னர் காலை 11 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
Tags:    

Similar News