ஆன்மிகம்
புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தில் மணிக்கூண்டு கோபுரம் அடிக்கல் நாட்டு விழா

புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தில் மணிக்கூண்டு கோபுரம் அடிக்கல் நாட்டு விழா

Published On 2021-09-15 04:28 GMT   |   Update On 2021-09-15 04:28 GMT
சிறப்புத் திருப்பலியை தொடர்ந்து பல சமயத்தவரும் இணைந்து பங்கு இறை மக்கள் முன்னிலையில் பங்குத்தந்தை அற்புதஅரசு அடிக்கல் நாட்டினர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா முத்துப்பட்டணம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் எல்லா சமயத்தவரும் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாகவும் விளங்குகிறது.

இங்கு மக்களுக்குப் பயன்படுகின்ற வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.தற்போது புதிதாக ஆரோக்கியமாதா கெபியும், மணிக்கூண்டு கோபுரமும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.புதிய கட்டிடத்திற்கான பணிகள் அனைத்து மக்களின் பொருளுதவியோடும் நடைபெறுகிறது.

காலையில் சிறப்புத் திருப்பலியை தொடர்ந்து பல சமயத்தவரும் இணைந்து பங்கு இறை மக்கள் முன்னிலையில் பங்குத்தந்தை அற்புதஅரசு அடிக்கல் நாட்டினர். விழாவிற்கான ஏற்பாட்டை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News