ஆன்மிகம்
தூய ஆரோக்கிய அன்னை

கயத்தாறில் தூய ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

Published On 2021-09-09 03:50 GMT   |   Update On 2021-09-09 03:50 GMT
தூய ஆரோக்கிய அன்னை ஆலய தேரோட்டத்தை கோவில் வளாகத்துக்குள் வைத்து பக்தர்கள் ஜெப வழிபாடு மற்றும் உப்பு, மிளகு மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர்.
கயத்தாறில் தூய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மாலையில் சிறப்பு சொற்பொழிவு, ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சொற்பொழிவு, நற்கருணை ஆராதனை ஆகியன நடைபெற்றது. நேற்று அதிகாலை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார், கயத்தாறு பங்குத்தந்தை வின்சென்ட் அடிகளார், விண்ணரசி தொழிற்பயிற்சி பள்ளி இயக்குனர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

தூய ஆரோக்கிய அன்னை ஆலய தேரோட்டத்தை கோவில் வளாகத்துக்குள் வைத்து பக்தர்கள் ஜெப வழிபாடு மற்றும் உப்பு, மிளகு மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர். பின்னர் ஆலய வளாகத்துக்குள் தேர் பவனி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News