ஆன்மிகம்

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2019-05-04 04:36 GMT   |   Update On 2019-05-04 04:36 GMT
உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு புதுவை-கடலூர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி மற்றும் தேர்பவனி நடக்கிறது. வருகிற 12-ந் தேதி காலை 5 மணிக்கு திருப்பலியும், அதனை தொடர்ந்து 7 மணிக்கு வேலூர் மறைமாவட்ட பேராயர் சவுந்தரராஜூ தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும், திவ்ய நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியநாதன் மற்றும் விழாக்குழுவினர், உழவர்கரை பங்கு மக்கள் செய்து வருகின்றனர்
Tags:    

Similar News