ஆன்மிகம்

முக்கூடல் அருகே சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2019-01-17 03:06 GMT   |   Update On 2019-01-17 03:06 GMT
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையில் புனித சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

கொடியேற்று விழாவில் சிங்கம்பாறை பங்கு தந்தை செல்வராஜ், ஜான் பெல்லார்மின் ஆகியோர் கலந்து கொண்டு கொடியேற்றினர். பின்னர் சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. தொட ர்ந்து வானவேடிக்கை, மதியம் அசன விருந்து ஆகியவை நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மின்னொளி கபடி போட்டி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News