ஆன்மிகம்
எட்டாமடை தூய திருக்குடும்ப ஆலய தேர் பவனி
அழகியபாண்டியபுரத்தை அடுத்த எட்டாமடை தூய திருக்குடும்ப தேவாலயத்தில் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
அழகியபாண்டியபுரத்தை அடுத்த எட்டாமடை தூய திருக்குடும்ப தேவாலயத்தில் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலையில் செபமாலை மற்றும் புகழ் மாலையும், இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நடந்தது. மாலையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள், பங்கு தந்தையினர் செய்திருந்தனர்.