ஆன்மிகம்
வாணாபுரத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு நடைபெற்றபோது எடுத்தபடம்.

கல்லறை திருநாள்: இறந்தவர் நினைவிடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை

Published On 2018-11-03 03:12 GMT   |   Update On 2018-11-03 03:12 GMT
திருவண்ணாமலை கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, பல்வேறு பூக்களை கொண்டு அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்தனர். பின்னர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆராதனைகளில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை கல்லறையில் கூட்டு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடந்தது.

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, பல்வேறு பூக்களை கொண்டு அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் பெருந்துறை பட்டு, அள்ளிகொண்டாபட்டு, இளையங்கன்னி, அந்தோணியார்புரம், தென் கரும்பனூர், கூடலூர், தண்டரை, விருது விளங்கினான், பெருமணம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கல்லறையில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களின் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News