ஆன்மிகம்

புளியங்குடி உலக மீட்பர் ஆலயத்திருவிழா

Published On 2018-07-02 03:24 GMT   |   Update On 2018-07-02 03:24 GMT
புளியங்குடி கத்தோலிக்க திருச்சபை உலகமீட்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று இரவு சப்பர பவனி நடைபெற்றது.
புளியங்குடி கத்தோலிக்க திருச்சபை உலகமீட்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகள் வரவேற்றார். சிதம்பராபுரம் பங்குத்தந்தை பீற்றர் அடிகள் கொடியேற்றி, திருப்பலி நிறைவேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

தினமும் நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெற்று வந்தது. 8-ம் திருநாளில் சிவகிரி பங்குத்தந்தை சேவியர் அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். அதனைத்தொடர்ந்து நற்கருணைப்பவனி நடைபெற்றது. 9-ம் திருநாளில் மேலஇலந்தைகுளம் பங்குத்தந்தை ஜீவா அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து சப்பர பவனி நடைபெற்றது.

10-ம் திருவிழாவான நேற்று மதுரை கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமட அதிபர் அருள்ராஜ் அடிகள் திருப்பலி நிறைவேற்றி, சிறப்பு மறையுரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து அசனம் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை அருள்மரியநாதன், பங்குப்பேரவை துணைத்தலைவர் ராசையா, செயலாளர் ஜோசப் அமல்ராஜ், பொருளாளர் அருள்ஜோசப்ராஜ், பங்குப்பேரவை நிர்வாகிகள், அருட்சகோதரிகள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News