ஆன்மிக களஞ்சியம்

சிவபெருமான் குறிப்புகள்-10

Published On 2024-12-25 18:10 IST   |   Update On 2024-12-25 18:10:00 IST
  • இளநீர், கரும்பின் சாறு, தயிர், தேன், நீர், நீறு, பசுநெய், பழம், பால், வெண்ணை இவையே சிவபிரானுக்கு உகந்த அபிஷேகப் பொருட்கள்.
  • பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு என்கிற இவை ஐந்துமே சிவனுக்குரிய ‘ஆனிடை ஐந்து’

01. ஜப்பானிய மக்கள் முற்காலத்தில் சிவனைச் 'சிவோ' என அழைத்து வணங்கியுள்ளனர்.

02. சிவபெருமான் முதன் முதலில் படைத்த மலை திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலம்.

03. இறைவன் சிவபெருமான் அர்ச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுத்த திருத்தலம் திருவேட்களம் என்னும் சிற்றூர். இங்கு இறைவனின் பெயர் பாசுபதேஸ்வரர்.

04. சிவபெருமான் ஆலகால நஞ்சினை அருந்திய பொழுது, உமாதேவியார் அவருடைய கண்டத்தைப் பிடிக்க, அவர் அவ்விஷக் கறையைத் தமது கண்டத்திற் காட்டியருளிய திருத்தலம் இலுப்பைப்பட்டு, இவ்வூர் பந்தணை நல்லூருக்கு அருகில் உள்ளது.

05. சிவனே கணக்கராய் இருந்து கோயிற் கணக்கை அரசனிடம் ஒப்புவித்த திருத்தலம்-'இன்னம்பர்' திருக்குடந்தை அருகில் உள்ளது.

06. சிவபிரானுக்கு பிடித்த ராகம் சங்கராபரணம். அன்னை உமையவளுக்கு பிரியமான ராகம்-கல்யாணி, தோடி, சாவேரி, தன்யாசி, பைரவி.

07. திருவாரூர் தியாராசர் பெருமானுக்கு தினமும் செங்கழுநீர்ப் பூ படைக்கப்படுகிறது.

08. கஸ்தூரி, கோரோசனம், குங்குமப்பூர், பச்சைக்கற்பூரம் முதலிய நறுமணப் பொருட்களைக் கூட்டி சிவபெருமானுக்கு ஒருமுறை சந்தனக் காப்பு அலங்காரம் செய்பவர் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன்புற்றிருப்பர் எனச் 'சிவ புண்ணியத் தெளிவு' கூறுகிறது.

09. இளநீர், கரும்பின் சாறு, தயிர், தேன், நீர், நீறு, பசுநெய், பழம், பால், வெண்ணை இவையே சிவபிரானுக்கு உகந்த அபிஷேகப் பொருட்கள்.

10. பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு என்கிற இவை ஐந்துமே சிவனுக்குரிய 'ஆனிடை ஐந்து'

Similar News