ஆன்மிக களஞ்சியம்
null

எளிய முறை பூஜை- ஆராதனை

Published On 2024-12-24 18:39 IST   |   Update On 2024-12-25 12:34:00 IST
  • கடவுளுக்காக ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால் என்றென்றும் இன்பங்கள் அடையலாம்.
  • உங்கள் அன்றாட பூஜையை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களை நல்ல வழியில் கூட்டி செல்லுங்கள்.

ஆராதனை என்று சொல்லும் போது அது கற்பூர தீப ஆரத்தியையே குறிக்கிறது.

கற்பூர தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி கற்பூர தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.

பின்னர் சிறிது பூவினை எடுத்து நீரில் நனைத்து கற்பூர தீபத்தினை 3 முறை சுற்றி ஏதோ எனக்கு தெரிந்த முறையில் முடிந்த அளவில் பூஜை செய்தேன்.

எனது பூஜையில் இருக்கும் குற்றம் குறைகளை மன்னித்து எனது பூஜையை ஏற்றுக் கொள்ளுங்கள் என மனதார வேண்டிக்கொண்டு பாதத்தில் சமர்பிக்க வேண்டும்.

ஓரிரு நிமிடங்கள் கண்ணை மூடி நாம் வணங்கிய தெய்வத்தின் உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

கற்பூர தீப ஆராத்தியினை தொட்டுக் கும்பிட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளவும்.

நம் வீட்டில் பூ, சூடம் இல்லை. தீர்ந்து விட்டது என்றால் அதற்காக கவலைப்பட தேவையில்லை. நம்மிடம் எது இருக்கிறதோ அதைக் கொண்டு பூஜை செய்தாலே இறைவன் ஏற்றுக் கொள்வார்.

ஒரு விளக்கை ஏற்றி, பால், பழம், கல்கண்டு, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை இதில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக வைத்து தீபம் காட்டி, மணி அடித்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்.

உங்கள் வாழ்வில் வளம் உண்டாகும்.

கடவுளுக்காக ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால் என்றென்றும் இன்பங்கள் அடையலாம்.

உங்கள் அன்றாட பூஜையை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களை நல்ல வழியில் கூட்டி செல்லுங்கள்.

Similar News