கிரிக்கெட்

உம்ரான் மாலிக் டி20ஐ விட ஒருநாள் போட்டிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்- வாசிம் ஜாபர்

Published On 2022-11-26 12:26 GMT   |   Update On 2022-11-26 12:26 GMT
  • வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.
  • காரணம் டி20 கிரிக்கெட்டில் நிறைய வித்தியாசமான பந்துகளை வீச வேண்டும்.

மும்பை:

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சார்பாக அறிமுகமான உம்ரான் மாலிக் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 306 ரன்கள் என்ற இலக்கை எட்டிய இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது .

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வாசிம் ஜாபர் கூறியதாவது:-

டாம் லாதம் போன்ற திறமையான வீரர்களை விரைவில் ஆட்டம் இழக்க செய்யுங்கள். நியூசிலாந்தில் அவர் ஒரு முக்கியமான வீரராக திகழ்கிறார். நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால் நீங்கள் அவர்களது விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும்.

வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவர் டி20 கிரிக்கெட் விட ஒருநாள் போட்டியில் தான் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். காரணம் டி20 கிரிக்கெட்டில் நிறைய வித்தியாசமான பந்துகளை வீச வேண்டும். அது அவருக்கு கிடையாது. மாறாக ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே லைனில் சரியாக தொடர்ந்து வீச வேண்டும் .

இதனை உம்ரான் மாலிக் நன்றாக செய்தார். இதேபோன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் சாகலுக்கு ஓய்வு வழங்கிவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும். குல்திப் யாதவ் நுணுக்கங்களாக பந்து வீசுவார். அதனை எதிர்கொள்ள நியூசிலாந்து வீரர்கள் தடுமாறுவார்கள். இதனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுங்கள்.

என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News