கிரிக்கெட்
null

டி20 அணி தேர்வு குறித்து யோசித்தால், அது குஜராத் அணிக்கு அநீதி இழைப்பதாகும்- சுப்மன் கில்

Published On 2024-04-25 15:58 GMT   |   Update On 2024-04-25 16:22 GMT
  • நான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு ஆவேன் என இருந்தால், தேர்வு ஆவேன்.
  • ஆனால் தற்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான்.

இந்திய அணியின் தலைசிறந்த இளம் வீரராக சுப்மன் கில் திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் டி20 உலகக்கோப்பை தொடர் வர இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது.

இதில் சுப்மன் கில் போன்றோருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் உலகக் கோப்பை தேர்வு குறித்து சுப்மன் கில் கூறியதாவது:-

இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விசயம். ஆனால், நான் உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால், அது தற்போதைய அணியான குஜராத் டைட்டன்ஸ்க்கு அநீதி இழைப்பதாகும். அதேபோல் எனக்கும் அநீதி இழைப்பதாகும்.

நான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு ஆவேன் என இருந்தால், தேர்வு ஆவேன். ஆனால் தற்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான். என்னுடைய அணிக்கு சிறந்ததை பெற்றுக் கொடுப்பது, அணிக்காக சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி சக வீரர்களுக்கு உதவி செய்வது குறித்துதான் கவனம் செலுத்துகிறேன்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய எனக்கு, எனது அனுபவங்கள் உண்டு. இன்னொரு உலகக் கோப்பையில் விளையாட முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நான் இவ்வளவு தூரம் யோசிக்கவில்லை.

நான் கடந்த சீசனில் கிட்டத்தட்ட 900 ரன்களை எடுத்துள்ளேன், என்னைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நான் எடுக்கப்படுவேன். இல்லையென்றால் (அப்படியானால்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News