கிரிக்கெட்

இந்திய அணியில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது- சுட்டிக்காட்டிய முன்னாள் நியூசிலாந்து வீரர்

Published On 2024-05-26 11:57 GMT   |   Update On 2024-05-26 11:57 GMT
  • சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
  • ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும்.

வெலிங்டன்:

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை பைனல்களில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி முழு மூச்சுடன் போராட உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியது பின்வருமாறு:-

டி20 அணியில் டாப் 5 - 6 பேட்ஸ்மேன்களில் பவுலர்கள் இல்லாதது இந்தியா தவற விட்ட பெரிய விஷயம். வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் தற்போதைய அணியில் உலகக்கோப்பை முடிந்ததும் நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் அபிஷேக் சர்மா, ருதுராஜ், ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரை நீங்கள் விரும்புவீர்கள்.

சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 2 - 3 ஆல் ரவுண்டர்கள், கணிசமாக பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு டவுல் கூறினார்.

Tags:    

Similar News