சினிமா
குறும்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் பிராவோ
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராவோ நடிக்கும் குறும்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராவோ, கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.
அந்த வகையில் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் கிரிக்கெட் மட்டுமல்லாது பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக இவர் பாடிய சாம்பியன் பாடல் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
இதேபோல் இவர் தமிழில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் 2-ம் பாகத்தில் "ஏன்டா" என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்நிலையில், அவர் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான குறும்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு கோவையிலும், வெஸ்ட் இண்டீசின் டிரினிடட் அண்டு டோபாக்கோவிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.