சினிமா
விக்ராந்த் ரோணா படத்தின் போஸ்டர்

விக்ராந்த் ரோணா

Published On 2021-09-04 17:53 IST   |   Update On 2021-09-04 17:53:00 IST
அனூப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப், ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் “விக்ராந்த் ரோணா” படத்தின் முன்னோட்டம்.
பிரமாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும் “விக்ராந்த் ரோணா”  திரைப்படம்,  3-D பதிப்பில், 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார். 

பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது வென்ற சிவக்குமார் படத்தின் கலை இயக்கம் செய்துள்ளார். கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீட்டா அஷோக் மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கிச்சா சுதீப், ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்

படத்தை பற்றி இயக்குனர் அனூப் பண்டாரி கூறியதாவது: 
“விக்ராந்த் ரோணா ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரம். இந்த திரைப்படத்தை உருவாக்கும் போது, இது மிகப்பெரிய பாத்திரம் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் சுதீப் இதில் கதாநாயகனாக வந்த பிறகு, அப்பாத்திரத்தின் பலம் இன்னும் அதிகமாகிவிட்டது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்” என்றார். 

Similar News