சினிமா
நந்தா பெரியசாமி இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷிவாத்மிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. குடும்பங்களை மையமாக வைத்து, உருவாகி உள்ள இப்படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி உள்ளார். ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பாக தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
கெளதம் கார்த்திக் ஜோடியாக ஷிவத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என பெரும் நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
ஆனந்தம் விளையாடும் வீடு படக்குழு
சித்து குமார் இசையமைக்கும் இப்படத்துக்கு போரா பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை சினேகன் எழுதி உள்ளார். ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.