சினிமா
வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ஸ்டண்ட் சிவா, நேஹா மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் முன்னோட்டம்.
யூத், பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், ஜித்தன் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, சில வருட இடை வெளிக்குப்பின் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘வேட்டையன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பாலு கே. தயாரிக்கிறார்.
இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர், ‘ஸ்டண்ட் சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பிரெஞ்சு ஆகிய 6 மொழிகளில், 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர். ‘வேட்டையன்’ படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
கேரளாவைச் சேர்ந்த நேஹா மேனன் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர், ‘மிஸ் கேரளா’வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்னொரு கதாநாயகியாக வைசாலி நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுபா வெங்கட் ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.