சினிமா
அடங்காமை படத்தின் போஸ்டர்

அடங்காமை

Published On 2021-04-28 15:02 IST   |   Update On 2021-04-28 15:02:00 IST
ஆர் கோபால் இயக்கத்தில் சரோன், பிரியா, யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் நடிப்பில் உருவாகி உள்ள ‘அடங்காமை’ படத்தின் முன்னோட்டம்.
வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கும் படம் ‘அடங்காமை’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர் கோபால். இவர் ஏற்கனவே மங்களாபுரம் என்ற படத்தை இயக்கியவர்.

இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்து இருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த பிரபல மாடல் அழகி, பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் இசை அமைக்கிறார்.



படம் பற்றி இயக்குனர் ஆர்.கோபால் கூறியதாவது: “சிறுவயதில் இருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு லட்சியத்தோடு வளர்கிறார்கள். அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும், இன்னொருவன் நடிகனாகவும், மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.

டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார். அதுமட்டுமல்ல, காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப் போய், நண்பர்களின் உதவியை நாடுகிறான் டாக்டர். கொலைகாரன் யார், கொலைக்கான காரணம் என்ன? இதற்கும் மற்ற நண்பர்கள் இருவருக்கும், தொடர்பு உள்ளதா? என்பதற்கு பதில் சொல்லும் படமாக இருக்கும்” என்றார்.

Similar News