சினிமா
ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமார், மாதவிலதா, ஜி.காளையப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மதுரை மணிக்குறவன்’ படத்தின் முன்னோட்டம்.
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரித்து வில்லனாக நடித்துள்ள படம் மதுரை மணிக்குறவன். ராஜரிஷி இயக்கியிருக்கிறார். தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்க, மாதவிலதா கதாநாயகியாகி நடித்துள்ளார்.
மேலும் சுமன், பருத்திவீரன் சரவணன், குணச்சித்திரங்களாக ராதாரவி, கெளசல்யா, ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே சுந்தர், அனுமோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசை - இளையராஜா, பாடல்கள்-முத்துலிங்கம், ஒளிப்பதிவு -டி.சங்கர், படத்தொகுப்பு - வி.டி.விஜயன், ஸ்டண்ட் - ஜாக்குவார் தங்கம், விஜய் ஜாக்குவார், நடனம் - தினா, அபிநயஸ்ரீ, தயாரிப்பு -ஜி.காளையப்பன், வசனம் - வெற்றி விஜய்
இதன் படப்பிடிப்பு மதுரை, தேனி, குரங்கினி, சுருளி, பாகனேரி, புல்வநாயகி அம்மன் கோயில் போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது. தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.