சினிமா
சார்பட்டா பரம்பரை பட போஸ்டர்

சார்பட்டா பரம்பரை

Published On 2021-03-09 15:06 IST   |   Update On 2021-03-09 15:06:00 IST
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். 



கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைகதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.

படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். 

Similar News