சினிமா
சுல்தான் பட போஸ்டர்

சுல்தான்

Published On 2021-02-14 18:01 IST   |   Update On 2021-02-14 18:01:00 IST
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள ‘சுல்தான்’ படத்தின் முன்னோட்டம்.
ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். மேலும் யோகிபாபு, கேஜிஎஃப் வில்லன் ராம்சந்திர ராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படம் குறித்து பாக்கியராஜ் கண்ணன் கூறியதாவது: மகாபாரதத்துல கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்னா எப்படி இருக்கும், அந்த புள்ளி தான் இந்த படம். முழுக்கதையும் இப்பவே சொல்லிட முடியாது. படத்தில் பாருங்க, உங்களுக்கு அந்த சர்ப்ரைஸ் இருந்துட்டே இருக்கும். நீரின்றி அமையாது உலகுனு சொல்லுவாங்க அதே போல் தான் உறவின்றி அமையாது உலகு. உறவுகளுக்காக முன்ன வந்து நிற்கும் ஒருவனின் கதை தான் இந்தப்படம். 



பரபரப்பான திரைக்கதையில் காதல், காமெடி எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் படமா இருக்கும். தெலுங்கில் ராஷ்மிகாவ கொண்டாடுறாங்க. ஆனா பக்கத்து வீட்டு பெண் போல, அவ்வளவு எளிமையா இருப்பார். நடிப்புனு வந்தா அசத்திடுறார். இப்படத்தில் கார்த்தி, ராஷ்மிகா ஜோடி கலர்ஃபுல்லா இருக்கும். கார்த்தி, யோகிபாபு  காமெடி கூட்டணிஅதகளப்படுத்யியிருக்காங்க. கேஜிஎஃப் வில்லன் ராம்சந்திர ராஜு மிரட்டியிருக்க்கார். வெறுமெனே அவர பார்த்தால் கூட பயமா இருக்கும், அந்த அளவு மனுஷன் நடிப்பில் பின்னியிருக்கார். 

விவேக் மெர்வின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு பெரும் கூட்டத்தை வைத்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணியிருக்கோம். தன்னை நம்பி வந்த உறவுகள எப்படி பாத்துக்கறதுங்கறத சுல்தான் சொல்லுவான். இது குடும்பத்துடன் ஜாலியா பார்க்ககூடிய படமா, அனைவருக்கும் பிடிக்கும் படமா இருக்கும். படம் அழகா வந்தததில் எங்களுக்கு முழு திருப்தி. ரசிகர்களின் பாராட்டுதலுக்காக தான் காத்திருக்கிறோம். ஏப்ரல் 2 ஆம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது “சுல்தான்” திரைப்படம்.

Similar News