மணிகண்டன் இயக்கத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடைசி விவசாயி’ படத்தின் முன்னோட்டம்.
கடைசி விவசாயி
பதிவு: ஜனவரி 24, 2021 18:36
கடைசி விவசாயி பட போஸ்டர்
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்ததாக இயக்கும் படம் ‘கடைசி விவசாயி’. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
சமுதாய அக்கறையோடு உருவாகும் இப்படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு காமெடி, காதல் என பல சிறப்பம்சங்களையும் சேர்த்து உருவாக்கி இருக்கிறார்களாம். எனவே, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக்கூடியதாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பி.அருண்குமார் கவனிக்கிறார்.
Related Tags :