சினிமா
கேங்ஸ்டர் 21 பட போஸ்டர்

கேங்ஸ்டர் 21

Published On 2021-01-17 12:37 GMT   |   Update On 2021-01-17 12:37 GMT
ரத்தன்லிங்கா இயக்கத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கும் ‘கேங்ஸ்டர் 21’ படத்தின் முன்னோட்டம்.
'அட்டு' படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா அடுத்ததாக இயக்கும் படம் 'கேங்ஸ்டர் 21'. ஏ.டி.ஆர்.  புரொடக்சன்ஸ் சார்பில் எம்.என். வீரப்பன் தயாரிக்கும் இப்படத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. 

இதற்கு ஒளிப்பதிவு - பாலாஜி, இசை - விக்ரம், ஸ்டண்ட் - ஸ்டன்னர் சாம், ஆர்ட் - ஆனந்த் என்று இதில் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஏற்கெனவே சில படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள். திறமையுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்சியில் இப்படம் உருவாகிறது. 
Tags:    

Similar News