சினிமா செய்திகள்
null
கவனம் பெறும் முனீஷ்காந்தின் "மிடில் கிளாஸ்" டீசர்
- ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களை தயாரித்தனர்.
- முனீஸ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி "மிடில் கிளாஸ்" என்ற புதிய படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநரான கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நடுத்தர குடும்பங்களின் இன்னல்களை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.