சினிமா
கிசுகிசு

கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடும் வாரிசு நடிகர்

Published On 2021-08-03 13:26 GMT   |   Update On 2021-08-03 13:26 GMT
கோலிவுட்டில் வாரிசு நடிகர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பிளாப் ஆனதால், புதிய படத்துக்கான கதை தேர்வில் சில நிபந்தனைகளை விதிக்கிறாராம்.
கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்த வாரிசு நடிகர் ஒருவருக்கு, கடைசியாக நடித்த சில படங்கள் தொடர்ந்து பிளாப் ஆனதாம். இதனால் இனி நடிக்க இருக்கும் படங்களுக்கான கதை தேர்வில் முழு கவனம் செலுத்த, அந்த நடிகர் திட்டமிட்டு உள்ளாராம். அதேபோல் தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு புது கண்டிஷன் ஒன்றை போடுகிறாராம்.

தன்னிடம் நன்றாக கதை சொல்லும் இயக்குனர்கள், அதை படமாக்கும் போது கோட்டைவிடுவதாக எண்ணும் அந்த நடிகர், இனிமேல் முழுக் கதையையும் கேட்டு, அது தனக்கு பிடித்தால் மட்டுமே அந்த இயக்குனருக்கு ஓகே சொல்வது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். 
Tags:    

Similar News