சினிமா
கிசுகிசு

சம்பளத்தை குறைக்க மறுக்கும் நடிகை

Published On 2021-05-20 23:38 IST   |   Update On 2021-05-20 23:38:00 IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இளம் நடிகை சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம்.
மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகை, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்யும் நடிகை தற்போது சம்பளத்திலும் விடாப்பிடியாக இருக்கிறாராம்.

இயக்குனர் ஒருவர் கதைசொல்லி நடிகையை அணுகினாராம். கதைக்கேட்டு பிடித்துப்போக, நடிகை 2 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் என்று கூறிவிட்டாராம். இயக்குனர் சம்பளத்தை குறைக்க சொல்லியும், மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம் நடிகை.

Similar News