சினிமா
இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட நடிகை
பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநருக்கு கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
பிரம்மாண்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர், தற்போது ஐந்து மொழிகளில் உருவாகும் புதிய படத்தை இயக்கி வருகிறாராம். இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகிறாராம்.
இந்த படத்தின் ஒரு காட்சிக்காக இயக்குனருடன் பணியாற்றிய பல நடிகர்களை அந்தக் காட்சியில் வைத்து படமாக்கலாம் என்று படக்குழுவினர் திட்டமிட்டார்களாம். நடிகையோ இந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். காட்சியில் நடிக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்தபின் அதன் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று சொல்லிவிட்டாராம். அனைவரையும் சான்றிதழ் வாங்கும்படி இயக்குநருக்கு கண்டிஷன் போட்டு விட்டாராம்.