சினிமா
கிசுகிசு

நடித்தால் கதாநாயகி தான், இல்லையென்றால் படமே வேண்டாம் - நடிகை அதிரடி

Published On 2020-04-25 20:02 IST   |   Update On 2020-04-25 20:02:00 IST
நடித்தால் கதாநாயகி தான், இல்லையென்றால் படமே வேண்டாம் என்று நடிகை அதிரடியாக கூறிவிட்டாராம்.
தமிழில் ஓரிரு படங்களில் நடித்த நடிகை, காதலரைப் பற்றி பேசி பிரபலமானாராம். சில மாதங்களிலேயே இவர்களுடைய காதல் முடிவுக்கு வந்ததாம். காதலர் போனால் என்ன புகழ் இருக்கிறதே சம்பாதிக்கலாம் என்று நினைத்தாராம்.

ஆனால் நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். நடிகை சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லையாம். சமீபத்தில் நடிகை கே கதாநாயகி தோழியாக நடிக்க வேண்டும் என்று அழைத்தார்களாம். ஆனால் நடிகை நடித்தால் கதாநாயகி வேடம் தான் இல்லன்னா நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

Similar News