சினிமா

படப்பிடிப்பில் இருந்து திடீரென்று வெளியேறிய நடிகை!

Published On 2017-09-03 17:50 IST   |   Update On 2017-09-03 17:50:00 IST
அழகாக இருந்தும் அவ்வளவாக வாய்ப்பு இல்லாத மும்பை நடிகை அவர். அவரை நெருக்கமான நண்பர்கள், “ஷா” என்று செல்லமாக அழைப்பார்கள். இவர், சாமி நடிகரும், பால் நடிகையும் நடித்து வரும் தமிழ் படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

திடீரென்று ஒருநாள், ‘ஷா’ நடிகை படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொண்டிருந்த போதே “உடனடியாக மும்பைக்கு போக வேண்டும். அங்கே ஒரு இந்தி படக்குழு எனக்காக காத்திருக்கிறது” என்றார். ஐந்து நடிகர்-நடிகைகளை வைத்து முக்கிய காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த டைரக்டருக்கு கோபம் தலைக்கு ஏறியது.

அவர் கோபத்தை பற்றி, ‘ஷா’ கவலைப்படவில்லை. “நான் போகிறேன்” என்று படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி விட்டார்!

Similar News