சினிமா

திருமணத்துக்கு தயாராகும் வம்பு நடிகர்

Published On 2016-06-20 16:32 IST   |   Update On 2016-06-20 16:32:00 IST
வம்பு செய்யும் நடிகர் தற்போது திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சர்ச்சைகளுக்கு பெயர் வம்பு நடிகரின் இரண்டு காதலும் கைநழுவி போனதால் இனிமேல் பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். ஜோசியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவருடைய அப்பாவும் தனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

வம்பு நடிகர் நடித்த படம் வெளிவருமா, வராதா என்று இருந்த நிலையில், ஒருவழியாக வெளியாகி ஹிட்டனதால் தனது மகனுக்கு நல்ல நேரம் பிறந்துவிட்டது என்று முடிவு செய்து தற்போது வம்பு நடிகருக்கு பெண் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளாராம். கூடிய விரைவில் வம்பு நடிகரின் திருமண செய்தி வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். 

Similar News