சினிமா செய்திகள்
null

உலகின் காஸ்ட்லியான திரைப்படம் எது தெரியுமா?

Published On 2024-01-20 10:55 GMT   |   Update On 2024-01-20 11:25 GMT
  • ஆதிபுருஷ் திரைப்படத்தை ஒப்பிட்டால் இதற்கு 6 மடங்கு அதிகம் செலவானது
  • இங்கிலாந்தில் படப்பிடிப்பு நடந்ததால் தயாரிப்பில் 25 சதவீதம் வரி சலுகை கிடைத்தது

சில வருடங்களாக இந்திய திரைப்படங்கள் உலகெங்கும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் புதிய உச்சங்களை தொடுகின்றன.

வசூலை வாரி குவிப்பதில் இந்திய திரைப்படங்கள் சாதனைகள் புரிவதால், அடுத்தடுத்து உருவாக்கப்படும் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களை தயாரிக்கும் செலவும் பல கோடிகள் அதிகரிப்பதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வருடம் வெளியான "ஆதிபுருஷ்" திரைப்படம், சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாரானது.


2015ல், ஹாலிவுட்டில் உருவாகி உலகெங்கும் வெளியான "ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்" (Star Wars: The Force Awakens) எனும் ஆங்கில படம், திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம்.

பிரபல ஹாலிவுட் முன்னணி ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு (Harrison Ford) கதாநாயகனாக நடித்து, ஜே ஜே அப்ரம்ஸ் (JJ Abrams) இயக்கிய இப்பட செலவு சுமார் ரூ.3000 கோடி ($447 மில்லியன்) மதிப்பை தொட்டது.

படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனமும் இணைந்து முடிவெடுத்தனர். எனவே, திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகளை இங்கிலாந்தின் பைன்வுட் ஸ்டூடியோவில் படம் பிடித்தனர். இதன் மூலம் 25 சதவீத செலவு தொகை அந்நாட்டில் வரிவிலக்கு மூலம் திரும்ப கிடைத்தது.

இத்திரைப்படம் $2.07 பில்லியன் வசூல் புரிந்து சாதனை புரிந்தது.

இப்பட பட்ஜெட், ஆதிபுருஷ் படத்திற்கு ஆன செலவை விட 6 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News