சினிமா செய்திகள்

சந்தோஷ் திரைப்படத்தை வெளியிடுவோம்.. ஜெயிலுக்கு போகவும் தயார் - பா.ரஞ்சித்

Published On 2025-04-07 07:11 IST   |   Update On 2025-04-07 07:11:00 IST
  • 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.
  • 'சந்தோஷ்' படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது.

வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்ட 'சந்தோஷ்' படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வெளியிட முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சந்தோஷ் திரைப்படத்தை அனுமதியின்றி வெளியிடுவோம் என்று இயக்குநர் பா. ரஞ்சித் பேசியுள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா. ரஞ்சித், "சந்தோஷ் திரைப்படத்தை வெளியிடுவதற்காக ஜெயிலுக்கு போகவும் தயார்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News