சினிமா செய்திகள்

விக்ரம் பிரபு நடித்த Love Marriage படத்தின் ஓடிடி ரிலீஸ் விரைவில்...

Published On 2025-08-16 12:19 IST   |   Update On 2025-08-16 12:19:00 IST
  • அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித் வெளியான திரைப்படம் 'லவ் மேரேஜ்'.
  • திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித் வெளியான திரைப்படம் 'லவ் மேரேஜ்'. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் திரைப்படம் இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் திரைப்படம் இந்தியாவிலும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

Tags:    

Similar News