சினிமா செய்திகள்

புதிய காதலியுடன் சுற்றும் விஜய் வர்மா: 'தமன்னா போல வருமா?' என ரசிகர்கள் கிண்டல்

Published On 2025-06-25 09:58 IST   |   Update On 2025-06-25 09:58:00 IST
  • தமன்னா எந்த கவலையும் இல்லாமல் படங்களில் பிசியாகிவிட்டார்.
  • பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவதாகவும் பேசப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்தனர். 'லஸ்ட் ஸ்டோரிஸ்-2' படத்தில் இருவரும் கிளுகிளுப்பான படுக்கையறை காட்சிகளில் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த காதல் முறிந்துபோனதாக தகவல் பரவியது. இருவரும் தனித்தனியாக விழாக்களில் பங்கேற்றனர்.

தமன்னா எந்த கவலையும் இல்லாமல் படங்களில் பிசியாகிவிட்டார். இந்தநிலையில் விரக்தியில் சுற்றிக்கொண்டிருந்த விஜய் வர்மாவுக்கு புது காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, 'தங்கல்' படத்தில் நடித்த பாத்திமா சனாகானும், விஜய் வர்மாவும் காதலிக்கிறார்களாம். இருவரும் மனிஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் 'உல் ஜலூல் இஷ்க்' படத்தில் நடித்து முடித்துள்ளனர்.

பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவதாகவும் பேசப்படுகிறது. வாடிப்போன மலராக காணப்பட்ட விஜய் வர்மா முகத்தில் சமீபகாலமாக பிரகாசம் குடியேறி இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.

அதேபோல, 'என்ன இருந்தாலும் தமன்னா போல வருமா?' என ரசிகர்கள் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.

Tags:    

Similar News