சினிமா செய்திகள்

ரொம்ப Wild-ஆன கற்பனை, நல்லா Execute பண்ணிருக்கீங்க - ஹவுஸ் மேட்ஸ் படத்தை பாராட்டிய எச்.வினோத்

Published On 2025-08-02 12:12 IST   |   Update On 2025-08-02 12:12:00 IST
  • தர்ஷன், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
  • மக்களின் வரவேற்பை தொடர்ந்து படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளனர்.

கனா திரைப்படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் தர்ஷன். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அடுத்ததாக தர்ஷன், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மக்களின் வரவேற்பை தொடர்ந்து படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளனர்.

கதாநாயகன் வீடு வாங்குகிறார் அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இது ஒரு காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குநர் எச்.வினோத் படக்குழுவை பாராடினார்.

இப்படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

Tags:    

Similar News