சினிமா செய்திகள்
null

வெளியானது 'வாத்தி' டிரைலர்... தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

Update: 2023-02-08 15:04 GMT
  • இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
  • வாத்தி படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

'வாத்தி' திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரைலர் இன்று வெளியானது. மிரட்டலாக வந்திருக்கும் இந்த டிரைலரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். வலைத்தளங்களில் கமென்டுகளையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர். 

Tags:    

Similar News